பிரதமர் மோடி அவர்கள், மனதின் குரல் நிகழ்ச்சியின் போது, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளநீர் விற்கும் பெண்ணை புகழ்ந்து பேசி உள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களுடன் உரையாற்றுவது உண்டு. அதன்படி இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் பேசிய பிரதமர் மோடி அவர்கள், அஞ்சல் அட்டைகள் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் மனதின் குரல் நிகழ்ச்சி குறித்து கருத்துக்களை என்னிடம் கூறியுள்ளனர். அவற்றில் பலவற்றை நான் படித்து இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சியின்போது திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளநீர் விற்கும் தாயம்மாள் என்ற பெண்ணை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், பொருளாதார நிலை சரியில்லாத போதும் தனது கல்வி விஷயத்தில் எதையும் விட்டுக் கொடுக்கவில்லை பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி கட்டமைப்புக்கு தாயம்மாள் ஒரு லட்சம் நன்கொடை அளித்தார் என பேசியிருந்தார்.
நாடு முழுவதும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிலர் பத்ம விருதுகளை பெற்றுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமர் ஜவான் ஜோதி போல நமது தியாகிகள் தியாகமும் அவர்களின் பங்களிப்பும் அழியாத் தன்மை கொண்டது. உங்கள் அனைவருக்கும் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கண்டிப்பாக தேசிய போர் நினைவகத்தில் குடும்பத்துடன் சென்று பார்த்து வாருங்கள் என தெரிவித்துள்ளார்.
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…