தேநீர் கொண்டு வந்த ஹரிவன்ஷைப் பாராட்டிய பிரதமர் மோடி..!
விவசாய சீர்திருத்த மசோதா தொடர்பான கலந்துரையாடலின் போது, சபையில் சலசலப்பை ஏற்படுத்தியதற்கும், துணை சபாநாயகருடன் தவறாக நடந்து கொண்டதற்கும் அவர்களை சபாநாயகர் வெங்கையா நாயுடு ஞாயிற்றுக்கிழமை இடைநீக்கம் செய்தார்.
மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் நேற்றிரவு முதல் காந்தி சிலைக்கு முன்னால் ஒரு தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, இன்று துணைத் தலைவர் ஹரிவன்ஷ் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தேநீர் கொண்டு வந்தார்.
ஆனால், அவர் கொண்டு வந்த தேநீரை எம்.பிக்கள் குடிக்க மறுத்தனர். விளம்பரத்திற்காக ஹரிவன்ஷ் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என விமர்சித்தனர். இந்நிலையில், பிரதமர் மோடி மாநிலங்களவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷைப் பாராட்டியுள்ளார்.
பிரதமர் மோடி ட்வீட் மூலம் பல நூற்றாண்டுகளாக, பீகார் மாபெரும் நிலம் எங்களுக்கு ஜனநாயகத்தின் மதிப்புகளை கற்பிக்கிறது. அந்த அற்புதமான நெறிமுறைகளுக்கு ஏற்ப, பீகாரைச் சேர்ந்த எம்.பி. மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஜி தன்னை அவமதித்த எம்.பிக்களுக்கு தேநீர் வழங்க முன்வந்தது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
For centuries, the great land of Bihar has been teaching us the values of democracy. In line with that wonderful ethos, MP from Bihar and Rajya Sabha Deputy Chairperson Shri Harivansh Ji’s inspiring and statesman like conduct this morning will make every democracy lover proud.
— Narendra Modi (@narendramodi) September 22, 2020