“வந்தே மாதரம்” பாடலை பாடி அசத்திய 4 வயது சிறுமிக்கு பிரதமர் மோடி பாராட்டு.!

Default Image

வந்தே மாதரம் பாடலை தனது அழகிய குரலில் பாடி அசத்திய 4வயது சிறுமிக்கு பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 4 வயது சிறுமி எஸ்தர் நம்தே தனது பெயரில் சுமார் 73,000 பேர் பின் தொடர்கின்ற யூடியூப் சேனல் ஒன்றை இயக்கி வருகிறார். இந்நிலையில் அந்த 4வயது சிறுமி வந்தே மாதரம் பாடலை தனது அழகிய குரலில் அருமையாக பாடி அவரது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதனுடன் நாம் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வதுடன் அன்பு, அக்கறை உள்ளிட்டவைகளின் தளமாக இந்தியா விளங்குவதாகவும், பன்முகத்தன்மை இருக்கும் போதிலும், நம் தாய்நாட்டிற்கு நல்ல மகன்களாகவும், மகள்களாகவும் ஒன்றிணைந்து நிற்போம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் இதனை மிசோரம் முதல்வர் சோரம்தங்கா தனது ட்விட்டர் பக்கத்தில், பகிர அதனை பிரதமர் மோடி ஷேர் செய்து வீடியோ பிரமிக்கும் வகையிலும், போற்றத்தக்கதாக உள்ளதாகவும், சிறுமி எஸ்தரை நினைத்து பெருமை கொள்வதாகவும் கூறி பாராட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்