ஜி20 மாநாட்டின் வெற்றி உங்கள் அனைவரையும் சேரும்.! அரசு அதிகாரிகள் மத்தியில் பிரதமர் மோடி பாராட்டு மழை.!

PM Modi

கடந்த செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகளை சேர்ந்த பன்னாட்டு தலைவர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இந்தோனீசியா, இத்தாலி உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து பெரும்பாலான தலைவர்கள் இந்தியா வந்திருந்தனர்.

தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளோடு எந்தவித அசம்பாவிதமும் இன்றி ஜி20  உச்சிமாநாட்டை இந்தியா தலைமை தாங்கி வெற்றிகரமாக நடத்தியது. இந்த மாநாடானது டெல்லியில் புதியதாக கட்டப்பட்டு இருந்த பாரத் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

இந்த ஜி20 மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதை அடுத்து டெல்லி பாரத் மண்டபத்தில் வைத்து ஜி20 மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்க உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.

பிரதமர் மோடி பேசுகையில், ஜி20 மாநாட்டின் வெற்றிக்கான பாராட்டுக்கள் உங்கள் அனைவரையும் சேரும். உங்கள் அனுபவங்களை ஆவணப்படுத்த நான் ஒரு கோரிக்கை வைத்துள்ளேன். இது எதிர்கால நிகழ்வுகளுக்கு வழிகாட்டியாக அமையும்.

எல்லோரும் ஜி20 மாநாடு குறித்த அவரவர் அனுபவங்களை உங்கள் மொழியில் எழுதலாம். ஜி20 உச்சிமாநாடு நடத்த எதிர்கொண்ட சவால்களை எப்படி சமாளித்தீர்கள் என்பது பற்றி அதில் குறிப்பிடலாம். இந்த ஆவணங்கள் இணையதள சேமிப்பு பக்கத்தில் சேமிக்கப்படும் என கூறினார்.

இந்த பாராட்டு விழாவில், அரசு உயர் அதிகாரிகள் மட்டுமின்றி,  துப்புரவு பணியாளர்கள், ஓட்டுநர்கள், மற்ற பணியாளர்கள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களை சேர்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த பாராட்டு விழா முடிந்த பிறகு அனைவருக்கும் இரவு விருந்து அளிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்