கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி..!

பிரதமர் மோடி டெல்லி இருந்து தனி விமானம் மூலம் சென்று கல்யாண் சிங் உடலுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமாகிய கல்யாண் சிங் கடந்த ஜூலை மாதம் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு, சிறுநீரக கோளாறு, இதயக்கோளாறு மற்றும் நரம்பியல் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று உடல்நிலை மோசமடைந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி டெல்லி இருந்து தனி விமானம் மூலம் சென்று கல்யாண் சிங் உடலுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் கல்யாண் சிங் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025