Michaung Cyclone : மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதியாக ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு. அதன்படி, மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை எதிர்கொள்ள தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு தனது தொகுப்பின் கீழ் மாநிலங்களுக்கு வழக்கமாக வழங்கும் மாநில பேரிடர் மீட்பு பணிகளுக்கான SDRF நிதியின் கீழ் 2வது தவணையாக ரூ.493.60 ஆந்திரா மாநிலத்திற்கும், ரூ.450 கோடி தமிழகத்துக்கும் முன்கூட்டியே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவில், மிக்ஜாம் புயலால் தமிழகம் மற்றும் ஆந்திராவை கடுமையாக பாதித்துள்ளது. இந்த மாநிலங்களில் மழை சேதத்தின் அளவு வேறுபட்டாலும், இந்த மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
எனவே, மாநில அரசுகளுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்காக, SDRF இன் 2வது தவணையின் மத்திய அரசின் பங்கான ஆந்திராவிற்கு ரூ.493.60, தமிழகத்திற்கு ரூ.450 கோடியை முன்கூட்டியே வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு (MHA) பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சரிடம் வெள்ள சேதம் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி!
இரு மாநிலங்களுக்கும் முதல் தவணை தொகையை மத்திய அரசு ஏற்கனவே வழங்கியிருந்தது. பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த முக்கியமான நேரத்தில் நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம், விரைவில் நிலைமை சீரடைவதை உறுதி செய்வோம் என்றுள்ளார்.
மேலும், சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடியை விடுவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதுதொடர்பான அவரது பதிவில், கடந்த 8 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மூன்றாவது பெரிய வெள்ளத்தை சென்னை எதிர்கொண்டுள்ளது.
பெருநகரங்களில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை நாம் அதிகம் பார்க்கிறோம். தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் (NDMF) கீழ், சென்னையில் புதிய திட்டத்திற்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்கு’ ரூ.561.29 கோடி நகர்ப்புற வெள்ள தடுப்பு திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய அரசின் உதவியும் அடங்கும்.
இந்த திட்டம் சென்னையை வெள்ளத்தைத் தாங்கக்கூடியதாக மாற்ற உதவும். நகர்ப்புற வெள்ளத் தடுப்பு முயற்சிகளின் இது முதன்மையானது என்றும் நகர்ப்புற வெள்ள மேலாண்மைக்கான பரந்த கட்டமைப்பை உருவாக்க உதவும் எனவும் கூறியுள்ளார். இதனிடையே, புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்ய, ரூ.5.060 கோடி நிதியுதவி வழங்கக்கோரி முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…