3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!
ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் 6வது குவாட் மாநாட்டில் இந்தோ பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு செய்ய வேண்டிய குறித்து ஆலோசிக்கப்படும்.
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி, அங்கு அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் குவாட் மாநாட்டில் பங்கேற்கிறார்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட உலகத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் 6வது குவாட் மாநாட்டில் இந்தோ பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு செய்ய வேண்டிய குறித்து ஆலோசிக்கப்படும். மேலும், அமெரிக்கா உடனான இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெறவுள்ளது.
மேலும், நியூயார்க்கில் நடைபெறும் மெகா நிகழ்வில் இந்திய மக்களிடம் பிரதமர் உரையாற்றுகிறார். தேர்தலுக்கு பிறகு, பிரதமர் மோடி அமெரிக்கா செல்வது இதுவே முதல் முறையாகும். இந்த பயணத்தின் கடைசி நாளில், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் ‘ உச்சி மாநாட்டில்’ பிரதமர் உரையாற்றுகிறார்.