ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி பப்புவா நியூ கினியா புறப்பட்டு சென்றார்.!
ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி பப்புவா நியூ கினியா புறப்பட்டு சென்றார்.
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகள் அரசு முறைப் பயணமாக, ஜப்பானுக்கு சென்றார். அங்கு ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி முன்னதாக அங்குள்ள மகாத்மா காந்தி அமைதி சிலையை திறந்து வைத்தார். மேலும் உயிரிழந்தவர்களின் நினைவிடங்களுக்கு மரியாதையை செலுத்தினார்.
தற்போது ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, பப்புவா நியூ கினியா சென்றார். பப்புவா நியூ கினியாவில், நாளை இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் மூன்றாவது உச்சிமாநாட்டை பிரதமர் தொகுத்து வழங்குகிறார். பப்புவா நியூ கினியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர், நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.