3 நாள் சுற்றுப்பயணம் நிறைவு: டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

PMModi

தமிழகத்திற்கு 3 நாள் பயணமாக வந்த பிரதமர் மோடி திருச்சி, ராமேஸ்வரம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகளை முடித்துக்கொண்டு தற்பொழுது தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி பிரதமர் மோடி கோவில்களுக்கு சென்று வருகிறார். அதன்படி, நேற்று திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்த மோடி இன்று தனுஷ்கோடி ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.

முதல் நாளான நேற்று முன் தினம் சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடி, நேரு விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் இரண்டாம் நாளான நேற்று ஸ்ரீரங்கம்  மற்றும் ராமேஸ்வரம்  கோவிலுக்கு பிரதமர் தரிசனம் செய்தார்.

நேற்று முதலில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் தெற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்து அனைத்து சன்னதிகளிலும் பிரதமர் சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து நேற்று மதியம்  ராமேஸ்வரம்  புறப்பட்ட பிரதமர்  ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடினார். பின்னர் நேற்றிரவு ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்துக்கு சென்ற பிரதமர், அங்கு தங்கி ஓய்வு எடுத்தார்.

ராமேஸ்வரம் – 22 புனித தீர்த்தங்களில் நீராடும் பிரதமர் மோடி!

மூன்றாம் நாளான இன்று காலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் மலர்கள், துளசி ஆகியவற்றை தூவி பிரதமர் வழிபாடு செய்ததோடு, சிறிது நேரம் தியானம், சூரிய வழிபாடு செய்தார். அதன் பின்னர் கோதண்டராம சுவாமி கோவிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்று வழிபாடு செய்தார்.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

இந்நிலையில், நாளை அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற  உள்ளதால், அங்கு சிறப்பு வழிபாட்டு செய்வதற்காக, 22 புனித தீர்த்தங்கள், புனித மண்ணை பெற்றுக்கொண்டு, ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை சென்ற பிரதமர் மோடி தற்போது மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்