உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை..!
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 24 மணி நேரத்தில் 2 உயர்மட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டு உள்ள நிலையில், மூன்றாவது உயர்மட்டக்குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது.
கடந்த 5 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து,தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.எனினும்,பதிலுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 24 மணி நேரத்தில் 2 உயர்மட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டு உள்ள நிலையில், மூன்றாவது உயர்மட்டக்குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 4 மத்திய அமைச்சர்களை, போலாந்து, ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.