2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!

இந்த இரண்டு நாள் பயணத்தில் சவுதி இளவரசர் முகமது சல்மான் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

Narendra Modi

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை ஏற்று, இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டார்.

இது அவரது மூன்றாவது முறையாக சவுதி அரேபியாவுக்கு மேற்கொள்ளும் பயணமாகும், முன்னதாக 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அவர் அந்நாட்டுக்கு பயணம் செய்திருந்தார். இந்தப் பயணம் இந்தியா-சவுதி அரேபியா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

சவுதி அரேபியாவுக்கு 2 நாள் பயணமாக செல்லும் பிரதமர் மோடி சவுதி இளவரசர் முகமது சல்மான் உள்ளிட்டோரை சந்திக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சவுதி அரேபியாவில் பல்வேறு கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளேன். மூலோபாய கூட்டாண்மை கவுன்சிலின் 2-வது கூட்டத்தில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். அங்குள்ள இந்தியர்களுடன் கலந்துரையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த சவுதி அரேபியா பயணம், இந்த சவுதி அரேபியா பயணம், இரு நாடுகளுக்கு இடையேயான வரலாற்று மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, பொருளாதார, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பில் புதிய பாதையை அமைக்கும்.

ஜெட்டாவில் நடைபெறும் இந்த உயர்மட்ட சந்திப்பு, அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம், கலாசாரம் மற்றும் மக்கள் தொடர்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்