குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டிசம்பர் 31ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டுகிறார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த மருத்துவமனைக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டிசம்பர் 31ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மத்திய துணை சுகாதாரத்துறை அமைச்சர் அர்வின் சௌபே ஆகியோர் காணொலி மூலம் கலந்து கொள்கின்றனர். ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்காக 201 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், "இந்தியாவா? பாகிஸ்தானா?…
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…