குஜராத்தில் எய்ம்ஸ்க்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.!
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க காணொலி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
டெல்லியிலிருந்து காணொலி மூலம் பிரதமர் மோடி புதிதாக அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று அடிக்கல் நாட்டினார். காந்தேரி கிராமம் அருகே 201 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,195 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் 9 கட்டடங்களின் வரைபடங்களுக்கு தற்காலிக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்படவிருக்கும் இந்த மருத்துவமனையின் பணிகள் 2022-ம் ஆண்டு மத்தியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
750 படுக்கைகளைக் கொண்ட இந்த நவீன மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் கட்டிடமும் அமைக்கப்படும். இங்கு 125 எம்பிபிஎஸ் இடங்களும், செவிலியர் படிப்புக்கான 60 இடங்களும் இருக்கும். மத்திய பிஎஸ்யூ எச்எஸ்சிசி லிமிடெட் நிறுவன வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் குஜராத் மாநிலத்தின் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், முதலமைச்சர் விஜய் ரூபானி, மத்திய சுகாதார அமைச்சர் ஹா்ஷ் வா்தன், இணை அமைச்சர் அஸ்வின் சௌபே ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடப்படுகிறது.