இந்த கொரோனா காலத்தில் எந்த ஒரு ஏழையும் பசியோடு தூங்கக் கூடாது என்பதற்காக தீவிரமாக உழைத்தோம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி ரூ.9,800 கோடி மதிப்பிலான “சர்யு நஹர் தேசிய திட்டம்”(நீர் கால்வாய் திட்டத்தை) உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூரில் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் 1978-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பின் பல காரணங்களால் தடைபட்டு வந்த நிலையில், கடந்த2016-ஆம் ஆண்டிலிருந்து பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சயீ யோஜனா திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு திட்டப் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ. 9800 கோடி, கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இதற்காக ரூ.4600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ககாரா, சரயு, ரப்தி, பங்கங்கா மற்றும் ரோகினி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் திட்டம் இதில் அடங்கும். இந்த திட்டம் 14 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும்.
மேலும், முக்கியமாக கிழக்கு உ.பி.யில் உள்ள 6,200 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 29 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் சர்யு நஹர் தேசிய திட்டத்திற்கான தொடக்க விழாவில் பேசிய பிரதமர், நாட்டின் வளர்ச்சிக்கு தண்ணீர் பஞ்சம் ஒரு தடையாக மாறாமல் இருப்பது முக்கியம். நதிநீரை சரியாகப் பயன்படுத்துவதே அரசின் முதன்மையான முன்னுரிமை. சாரியு நஹர் தேசிய திட்டத்தை நிறைவு செய்தது நேர்மையான நோக்கங்களுக்கும் திறமையான பணிக்கும் சான்றாகும்.
இந்த கொரோனா காலத்தில் எந்த ஒரு ஏழையும் பசியோடு தூங்கக் கூடாது என்பதற்காக தீவிரமாக உழைத்தோம். இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் ஹோலி பண்டிகை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…