புதிய கல்வி கொள்கை குறித்து வடிவமைத்து குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
புதிய கல்வி கொள்கை தொடர்பாக இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான 9 பேர் குழுவை கடந்த 2017-ஆம் ஆண்டு மத்திய அரசு அமைத்தது.இந்தக் குழுவானது அறிக்கையை மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம், சமர்ப்பித்தது.மத்திய அரசானது அண்மையில் புதிய கல்வி கொள்கை 2020-ஐ அறிமுகப்படுத்தியது.அந்த கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பெற்றிருந்தது. அதாவது, தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு விருப்ப மொழியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டது. மேலும், 3,5,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைமுறையையும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த பல்வேறு கருத்துக்களால் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் பலரும் எதிர்த்து கருத்து கூறி வருகின்றனர்.
இதனிடையே புதிய கல்விக்கொள்கை மூலம் உயர்கல்வியில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக நேற்று உரையாற்றினார்.அப்போது புதிய கல்விக் கொள்கையின் சிறப்புகள் பற்றி எடுத்துரைத்தார்.மேலும் புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்த கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவிற்கு பாராட்டுகளை தெரிவிப்பதாக தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…