பார்வதி கோயில் உள்ளிட்ட திட்டங்கள் – அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி…!
குஜராத் சோம்நாத்தில் பார்வதி கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
குஜராத்தின் சோம்நாத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் சில திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று காலை அடிக்கல் நாட்டினார்.
அதன்படி,குஜராத்தில் பிரதமர் மோடியால் துவக்கப்பட்ட திட்டங்களில் சோமநாத் கண்காட்சி மையம், சோம்நாத் நடைபாதை, பழைய (ஜுனா) சோமநாத்தின் புனரமைக்கப்பட்ட கோவில் வளாகம் மற்றும் பார்வதி கோவில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுற்றுலா அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குஜராத்தின் சோம்நாத்தில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட திட்டங்கள்:
1. சோம்நாத் நடைபாதை:
சோமநாத் ஆன்மீக, பாரம்பரிய மேம்பாட்டு இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ. 47 கோடி மதிப்பில் ஆன்மீக ஓவியங்கள், வண்ணமயமான விளக்குகள் மற்றும் பெஞ்சுகளால் அலங்கரிக்கப்பட்ட கோவிலுக்குப் பின்னால் 1 கிலோமீட்டர் நீளமுள்ள ‘சமுத்திர தரிசனம்’ சோம்நாத் நடைபாதையில் இருக்கும்.
2. சோம்நாத் கண்காட்சி மையம்
இந்த மையம் ‘சுற்றுலா வசதி மையம்’ வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பழைய சோம்நாத் கோவிலின் சிதைந்த பகுதிகளிலிருந்தும், பழைய சோமநாதரின் நாகர் பாணி கோவில் கட்டிடக்கலை கொண்ட அதன் சிற்பங்களிலிருந்தும் காட்சிப்படுத்தப்படும்.இதன்,மதிப்பீடு ரூ. 75 லட்சம்.
3. பழைய (ஜூனா) சோமநாதரின் புனரமைக்கப்பட்ட கோவில் வளாகம்:
பழைய (ஜுனா) சோம்நாத்தின் புனரமைக்கப்பட்ட கோவில் வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.இதன் செலவு மதிப்பீடு 3.5 கோடி ஆகும்.
இந்த கோவில் அகிலாபாய் கோவில் என்றும் குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் சேதமடைந்த இந்த கோவிலியா இந்தூர் ராணி அஹில்யாபாய் கட்டியதால் இப்பெயர் பெற்றது.பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தற்போது இந்த கோயில் புதுப்பிக்கப்ட்டுள்ளது.
பார்வதி கோவில் கட்டுவதற்கான அடிக்கல்:
இந்நிகழ்வின் போது, பிரதமர் மோடி பார்வதி கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த கோவில் மொத்தம் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது.
Prime Minister Narendra Modi lays the foundation stone of multiple projects in Somnath, Gujarat via video conferencing.
The projects include Somnath Promenade, Somnath Exhibition Centre, Parvati Temple and reconstructed temple precinct of Old (Juna) Somnath pic.twitter.com/Tcvx3XTmjm
— ANI (@ANI) August 20, 2021