பிரதமர் மோடியின் ராஜஸ்தான் பயணம்.! 6 மாதத்திற்கு முன்பே பிரச்சாரமா.?
பிரதமர் மோடி மே 12இல் ராஜஸ்தான் செல்ல உள்ளார். அங்கு இந்த வருட இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு வார காலத்திற்குள் நடைபெற உள்ளதால் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என பிரதான கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகா சட்ட்டமன்ற தேர்தல் 10ஆம் தேதி நடைபெற்று, 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில், இங்கு கர்நாடக சுற்றுப்பயண பிரச்சாரத்தை முடித்துவிட்டு, அடுத்தாக பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலம் செல்ல உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு பிரச்சார முன்னோட்டமாக இந்த பொதுக்கூட்டம் இருக்கும் என கூறப்படுகிறது.
ராஜஸ்தான், சிரோஹி மாவட்டத்தில் வரும் மே 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட்டு வருகிறது.