சோழர்கள் கட்டிய கல்லணை தற்போதும் மக்களுக்கு செழிப்பை தருகிறது.! பிரதமர் மோடி பெருமிதம்.!
2,000 ஆண்டுகளுக்கு முன் சோழர்களால் கட்டப்பட்ட கல்லணை இன்றும் மக்களுக்கு செழிப்பை அளித்து வருகிறது. – பிரதமர் மோடி பெருமிதம்.
பட்ஜெட் நிதிநிலை அறிக்கை முடிந்த பிறகு நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், நாட்டின் உள்கட்டமைப்ப்பு மேம்பட வேண்டும். அப்படி உள்கட்டமைப்பு மேம்பட்டால் அது நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என தெரிவித்தார்.
மேலும், நாட்டின் நவீன உள்கட்டமைப்பு வளர் மாநில அரசுகளும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்லணை பற்றி பெருமையாக பேசினார்.
அப்போது, 2,000 ஆண்டுகளுக்கு முன் சோழர்களால் கட்டப்பட்ட கல்லணை இன்றும் மக்களுக்கு செழிப்பை அளித்து வருகிறது. என பெருமையாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.