பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை பின்தொடர்வோர் எண்ணிக்கை 7 கோடியாக (70 மில்லியன்) அதிகரித்துள்ளது.
உலகளவில் அரசியலில் தற்போது உள்ள தலைவர்களில் அதிகமாக பின்தொடர்வோர் எண்ணிக்கையில் பிரதமர் மோடி முதலிடத்தில் இருக்கிறார். கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் சமூகவலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் கணக்கை தொடங்கிய பிரதமர் மோடி, சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்படும் தலைவரானார்.
இதன்பின் படிப்படியாக அவரை ட்விட்டரில் பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமரை பின்தொடர்வோர் எண்ணிக்கை 6 கோடியை (60 மில்லியன்) நெருங்கியது. இந்த நிலையில், இவ்வாண்டு 2021 மேலும் அதிகரித்து, பிரதமர் மோடியின் கணக்கை பின்தொடர்வோர் எண்ணிக்கை 7 கோடியை (70 மில்லியன்) தாண்டியுள்ளது.
இதனால் உலகளவில் தற்போது உள்ள தலைவர்களில் ட்விட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கையில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். இந்திய பிரதமரை தொடர்ந்து, போப் பிரான்சிஸ் ட்விட்டர் கணக்கை பின்தொடர்வோர் எண்ணிக்கை 5.30 கோடி ( சுமார் 50 மில்லியனுக்கு மேல்) உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்விட்டர் கணக்கை பின்தொடர்வோர் எண்ணிக்கை 3.90 கோடியாக உள்ளது.
இதனைத்தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ட்விட்டர் கணக்கை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 2.63 கோடி (26.3 மில்லியன்) பேரும், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி கணக்கை 1.94 கோடி (19.4 மில்லியன்) பேரும் பின்தொடர்கின்றனர்.
இதுபோன்று, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் ட்விட்டர் கணக்கை 12 கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். அதேபோல், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கணக்கை 8.87 கோடி பேர் பின்தொடர்ந்தாலும் ட்ரம்ப் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…