பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று வாரணாசி செல்கிறார்!

Default Image

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு வருகிறார்.

பிரதமர் அலுவலகம் (PMO) படி, பிரதமர் மோடி, தனது பயணத்தின் முதல் நாளான இன்று மதியம் 12 மணிக்கு, பிரபலமான கால பைரவர் கோயிலுக்குச் செல்வார். பின்னர், சுமார் ஒரு மணி நேரம் கழித்து, அவர் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று, சுமார் 339 கோடி செலவில் கட்டப்பட்ட காசி விஸ்வநாத் தாமின் முதல் கட்டத்தைத் திறந்து வைப்பார் என்று பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

திட்டத்தின் முதல் கட்டத்தில் மொத்தம் 23 கட்டடங்கள் தொடங்கி வைக்கப்படவுள்ளன. இந்த திட்டத்திற்கான பணிகள் கடந்த 2019 மார்ச் 8-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கின. இரண்டாவது மற்றும் கடைசி நாளான டிசம்பர் 14ஆம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு, நகரிலுள்ள ஸ்வர்வேட் மகாமந்திரில் நடைபெறும் சத்குரு சதாஃபல்டியோ விஹங்கம் யோக் சன்ஸ்தானின் 98-வது ஆண்டு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார்.

2 நாள் பயணத்தின் போது, அசாம், அருணாச்சல பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில முதல்வர்கள் மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் பீகார் மற்றும் நாகாலாந்து துணை முதல்வர்களும் கலந்து கொள்கின்றனர்.

பீகார் மற்றும் நாகாலாந்து தவிர, அனைத்து மாநிலங்களிலும்  பாரதிய ஜனதா கட்சி (பாஜக) முதல்வர்கள் உள்ளனர். மீதமுள்ள இரண்டில், பாஜக ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்