பாராலிம்பிக் குழுவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!

Default Image

பாராலிம்பிக் குழுவுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடி வருகிறார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு, ஜப்பானின் டோக்கியோவில் கோடைகால பாராலிம்பிக்கில் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளது. டோக்கியோ பாராலிம்பிக் போட்டி வரும் 25-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் செப்டமபர் 6-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

9 விளையாட்டுகளில் இந்தியாவின் சார்பில் இதுவரை இல்லாத அளவிற்கு 54 பேர் இதில் பங்கேற்கின்றனர்.

இதனிடையே, டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்லுபவர்களுக்கு இந்த ஆண்டு தேசிய விளையாட்டு விருதுகள் பரிசளிக்கப்படும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது போல, வரவிருக்கும் பாரா ஒலிம்பிக்கிலும் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம் என கூறியிருந்தார்.

இந்நிலையில்,54 பேர் கொண்ட பாராலிம்பிக் குழுவுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடுகிறார்.அந்த வகையில், பெங்களூருவில் பயிற்சி பெற்று வரும் தடகள வீரர் மாரியப்பனுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.மேலும்,சேலத்தில் இருந்து மாரியப்பன் அவரது குடும்பத்தினரும் காணொலியில் பங்கேற்றனர்.கடந்த பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாரியப்பன்,இந்த முறையும் போட்டியில் பங்கேற்கிறார்.

இதனையடுத்து,நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தனது ஆதரவை வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் நன்றி கூறினார்.மேலும், “உங்கள் ஊக்கம் இளைஞர்களை விளையாட்டுகளில் ஈடுபடுத்தி அதில் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும்” என்று பிரதமரிடம் அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்