அயோத்தியில் பிரதமர் மோடி.! ரூ.15,700 கோடிக்கு திட்டங்கள்.. புத்தம புது ஏர்போர்ட்.. ரயில் நிலையம்…

PM Modi in Ayodhya

உத்திர பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் புதியதாக பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த ராமர் கோயில் திறப்பு விழாவானது (Pran Pratishtha) வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது . இந்த விழாவில் பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் என பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கான விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் சோனியா காந்தி, கார்கே.? காங். தலைவர்கள் கூறுவதென்ன.?

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு மற்ற பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதனை இன்று பிரதமர்மோடி துவக்கி வைக்க உள்ளார். ஏற்கனவே முடிந்த திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தும், புதிய திட்டங்கள் தொடங்க அடிக்கல் நாட்டவும் உள்ளார் பிரதமர் மோடி.

அயோத்திக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, புதிய ஏர்போர்ட் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. 1,550 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விமான நிலையம், 6,500 ச.அடி பரப்பளவு கொண்டது. ஆண்டுக்கு 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல, 240 கோடி செலவீட்டில் புதியதாக சீரமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையமும் இன்று திறக்கப்பட உள்ளது. அந்த ரயில் நிலையத்தில், மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள், ஷாப்பிங் மால், தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் ரயில் நிலையம் சீரமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 2 அம்ரித் பார்த் ரயில்கள் சேவையும் அயோத்தியில் துவக்கப்பட்ட உள்ளது. மேலும், தென்னகத்திற்கு 2 வந்தே பாரத் ரயில்கள் உட்பட 6 வந்தே பாரத் ரயில்கள் இன்று துவங்கப்பட உள்ளன. மேலும், 15,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்