Prime Minister Narendra Modi 11 days fasting [file image]
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா ஜன. 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நாளுக்காக ராமர் பக்தர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். இதன்பின் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ராமர் கோயில் திறப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர்.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் நேற்று முதல் தொடங்கி உள்ளன. இதனிடையே, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி 11 நாட்கள் விரதத்தை கடந்த 12ம் தேதி தொடங்கினார். இந்த நிலையில், பிரதமர் மோடி கடுமையான விரதத்தை கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த 11 நாள் கடும் விரதம் இருந்து வரும் பிரதமர் மோடி விதிமுறைகள் மற்றும் சடங்குகளை கண்டிப்புடன் பின்பற்றி வருகிறார்.
மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை..!
அதாவது, ஒரு போர்வையுடன் மட்டுமே தரையில் தூங்குவது, அதிகாலையில் எழுந்திருப்பது, மந்திரம் ஓதுவது, தியானம் செய்வது, உடற்பயிற்சி செய்வது, சிறிது நேரம் மௌன விரதம் இருப்பது, வெங்காயம், பூண்டு இல்லாத சாத்வீக உணவுகளை மட்டும் உண்பது, மத நூல்களைப் படிப்பது, தூய்மையை பேணுவது, சொந்த வேலைகளை தானே செய்வது என பல வகையான கட்டுப்பாடுகளை கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக “சாத்விக்” உணவு மூலம் மனதையும் உடலையும் தூய்மைப்படுத்தி வருவதாகவும், தேங்காய் தண்ணீர் மட்டுமே குடித்து வருவதாகவும் தெரிவிக்கின்றன. இதனிடையே, ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோயில்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி மக்களை கேட்டுக்கொண்டிருந்தார். அந்தவகையில், கடந்த வாரம், மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள காலாராம் கோயிலின் வளாகத்தை பிரதமர் மோடி சுத்தம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…