#Breaking:ஆப்பிரிக்க நாடுகளில் பரவும் வீரியமிக்க கொரோனா;அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

டெல்லி:கொரோனா நிலைமை மற்றும் தடுப்பூசிகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவர்கள்,தற்போது ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்,கொரோனா நிலைமை மற்றும் தடுப்பூசிகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தலைநகர் டெல்லியில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன்,அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, பிரதமரின் முதன்மை செயலாளர் பிகே மிஸ்ரா மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் விகே பால் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
குறிப்பாக,ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் வீரியமிக்க கொரோனா வைரஸ்,இந்தியாவுக்குள் பரவாமல் தடுப்பது பற்றி இந்தக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025