பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு.! 10 லட்சம் இளைஞர்களுக்கு புதிய அரசு வேலைவாய்ப்புகள்.!
ரோஸ்கர் மேளா எனு ம் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் மூலம் பல்வேறு துறைகளில் பணிக்கு சேர்ந்த 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார் பிரதமர் மோடி.
பிரதமர் அலுவலகம் இன்று நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் வகையில் ‘ரோஸ்கர் மேளா’ எனு ம் மாபெரும் வேலை வாய்ப்பு முகாமை வருகிற 22ஆம் தேதி (நாளை) சனிக்கிழமை அன்று பிரதமர் மோடி காணொளி வாயிலாக திறந்து வைக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் பணிக்கு சேர்ந்த 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி. இந்த திட்டத்தின் படி நாடு முழுவதிலும் இருந்து தேர்வாகும் நபர்கள் மத்திய அரசு துறைகளில் பணிகளில் சேர்வார்கள்.
மத்திய அரசின் கீழ் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை இத்திட்டத்தின்கீழ் நிரப்புவதற்கு கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார்.
யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே தேர்வாணையம் போன்றவை மூலம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.