நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்பு – திறந்து வைத்தார் பிரதமர் மோடி
டெல்லியில் டாக்டர் பி டி மார்க்கில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்புகளை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்துள்ளார்.
இந்த குடியிருப்புகள் டெல்லியில் உள்ள டாக்டர் பி.டி.மார்க்கில் அமைந்துள்ளது. 80 வருடங்கள் பழமையான 8 பங்களாக்கள் 76 குடியிருப்புகளாக புதிதாக கட்டப்பட்டுள்ளது.இந்த பிளாட்களின் கட்டுமானப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியயைவிட சுமார் 14 % குறைவாக செலவு செய்து கட்டிட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் இருந்தபோதிலும் உரிய காலத்தில் இவை கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டிடம் பசுமைக் கட்டிடமாகும்.ஏனென்றால் சாம்பலிலிருந்து செய்யப்பட்ட செங்கற்கள் மற்றும் கட்டுமான இடிப்பு கழிவுகள், வெப்ப காப்பு மற்றும் எரிசக்தியை சேமிக்கும் இரட்டை மெருகூட்டப்பட்ட ஜன்னல்கள், எரிசக்தி-திறனுள்ள எல்.ஈ.டி விளக்குகள், ஏர் கண்டிஷனர்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது.மேலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ,நீரை சேமிக்கும் வசதி மற்றும் கூரையில் சூரிய ஒளி சக்தி கருவி போன்றவையும் பொருத்தப்பட்டுள்ளது.