அறிவியல் மாநாட்டை காணொளி மூலம் டெல்லியில் இருந்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.!
குஜராத், அகமதாபாத்தில் நடைபெறும் மத்திய மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.
மத்திய மாநில அறிவியல் மாநாடானது, இன்றும் நாளையும் (செப்டம்பர் 10 மற்றும் 11) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அறிவியல் நகரில் நடைபெற உள்ளது. இன்று காலை இந்த மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி மூலம் தொடங்கி வைத்தார். பின்னர் அந்த மாநாட்டில் பிரதமர் உயரையாற்ற உள்ளார்.
இந்த மாநாட்டின் நோக்கமானது வலுவான அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமையான சுற்றுச்சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். நாட்டில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பவர் மற்றும் தொழில் முனைவோருக்கு வசதி செய்து கொடுக்கும் முயற்சியில் தான் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
இதில், எதிர்கால வளர்ச்சி பாதைகள், அனைவருக்கும் டிஜிட்டல், சுகாதார வசதி, 2030க்குள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் துறை முதலீட்டை இரண்டு மடங்காக மாற்றுதல். வேளாண்மை விவசாயிகளின் வருவாய் அதிகரிக்க தொழில்நுட்ப தேவைகள், தூய்மையான குடிநீர் தயாரிப்பதற்கான புதிய கண்டுபிடிப்பு, ஹைட்ரஜன் இயக்கத்தில் அறிவியல் தொழில்நுட்ப பங்களிப்பு உட்பட அனைவருக்கும் தூய ஏரிசக்தி, கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு நாட்டின் எதிர்கால பொருளாதாரத்திற்கும் பொருத்தமான ஆழ்கடல் இயக்கம் உள்ளிட்ட மையப் பொருட்களின் கீழ் இந்த மாநாடு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.