பிரமாண்ட வெண்கல தேசிய சின்னத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி… எங்கு திறந்துள்ளார் தெரியுமா.?!

Default Image

புதிய பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள 6.5 மீட்டர் உயரம் கொண்ட தேசிய சின்ன சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 

பாரத பிரதமர் நரேந்திர மோடி, இன்று புதிய பாராளுமன்ற வளாகத்தில் ஓர் புதிய 6.5 மீட்டர் உயரம் கொண்ட தேசிய சின்னத்தை திறந்து வைத்தார். இந்த சின்னம் முழுவதுமாக வெண்கலத்தால் ஆனது.

 

நான்கு சிங்க முகம் கொண்ட நமது நாட்டின் தேசிய சின்னத்தை வடிவமைத்த தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.இந்நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த சின்னம் வெண்கலத்தால் ஆனது மற்றும் 6.5 மீ உயரம் கொண்டது, மேலும் வார்ப்பதற்காக ஒன்பது மாதங்களுக்கு மேல் ஆனது என்று மூத்த மத்திய பொதுப்பணித் துறை (CPWD) அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சின்னம் வெண்கலத்தால் ஆனது மற்றும் 6.5 மீ உயரமும் ,4.4 மீட்டர் அகலமும்  9,500 கிலோ எடையும் கொண்டது.புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மையப்பகுதியில் அமைக்கப்ட்டுள்ளது.இதை  தாங்கும் வகையில் சுமார் 6,500 கிலோ எடையுள்ள எஃகு துணை அமைப்பு கட்டப்பட்டுள்ளது.

இதன் பின்னர் தேசிய சின்ன பிரமாண்ட சிலையுடன் நின்று மோடி புகைப்படம்  எடுத்துக்கொண்டார்.

pm modi national emblem
pm modi national emblem

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்