டெல்லியில் முதல்வர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…!

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என பிரதமர் மோடி பேச்சு.
டெல்லியில் இன்று முதல்வர்கள், நீதிபதிகள் ஒருங்கிணைந்த மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார். இந்த மாநாட்டில், முதல்வர்கள் யோகி ஆதித்யநாத், மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், பசவராஜ் பொம்மை, பூபேஷ் பாகல், பிப்லப் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தின் சார்பில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்என் பண்டாரியும் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு முதன்மை அங்கமாக நீதித்துறை அமைப்புகளில் தொழில்நுட்ப வாய்ப்புகள் குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு 1,800 பொருத்தமற்ற சட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, 1,450 சட்டங்கள் ஒழிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?
April 26, 2025
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025