நேருக்கு நேராக சிங்கத்தை பார்த்த பிரதமர் மோடி! சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவு!
இன்று சர்வதேச வனவிலங்கு தினம் என்பதால் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு பாதுகாப்பகத்திற்கு சென்றுள்ளார்.

குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு பாதுகாப்பகத்தில் (Gir Wildlife Sanctuary) சிங்க சஃபாரியில் (Lion Safari) பங்கேற்றார். ஜிர் காடு ஆசிய சிங்கங்களின் ஒரே தாயகம் என்பதால், அங்கு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு முயற்சிகளை நேரில் பார்வையிட்டு புகைப்படமும் எடுத்தார்.
ஒருகாலத்தில், ஆசிய சிங்கங்கள் இந்தியா முழுவதும் காணப்பட்டன. ஆனால், காற்றில் இருக்கும் மற்ற விலங்குகள் வேட்டையாடுகிறது என்பதாலும், காட்டுப்பகுதிகள் குறைதல் போன்ற காரணங்களால், அவற்றின் எண்ணிக்கை கடும் சரிவைக் கண்டது. கடந்த சில ஆண்டுகளில், இந்திய அரசு மற்றும் குஜராத் அரசு இணைந்து மேற்கொண்ட பாதுகாப்பு முயற்சிகளால், இப்போது ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த உலகத்தில் ஆசிய சிங்கங்கள் வாழும் ஒரே இடம் குஜராத்தின் ஜிர் வனம் தான். தற்போது 30,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், 9 மாவட்டங்களில் உள்ள 53 தாலுக்காக்களில் சிங்கங்கள் இருக்கிறது. எனவே, அடிக்கடி பிரதமர் மோடி அங்கு சென்று பார்வையிட்டு வருகிறார். அப்படி தான் இன்று உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு சென்றிருக்கிறார்.
அங்கு சென்று புகைப்படங்கள் எடுத்தும் விடியோவையும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியீட்டு இருந்தார். அதில் ” இன்று காலை, உலக வனவிலங்கு தினத்தன்று, நான் கிர் என்ற இடத்தில் சஃபாரிக்குச் சென்றேன். இது நம் அனைவருக்கும் தெரியும், கம்பீரமான ஆசிய சிங்கத்தின் தாயகம். நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, நாங்கள் கூட்டாகச் செய்த பணியின் பல நினைவுகளை கிர் பகுதிக்கு வரவழைக்கிறது.
Lions and lionesses in Gir! Tried my hand at some photography this morning. pic.twitter.com/TKBMKCGA7m
— Narendra Modi (@narendramodi) March 3, 2025
இப்போது புலிகள், சிறுத்தைகள், காண்டாமிருகங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது, வனவிலங்குகளை நாம் எவ்வளவு ஆழமாக மதிக்கிறோம் மற்றும் விலங்குகளுக்கு நிலையான வாழ்விடங்களை உருவாக்க உழைக்கிறோம் என்பதைக் குறிக்கிறது. உலக வனவிலங்கு தினம் வாழ்த்துக்கள்.
கடந்த பல ஆண்டுகளில், ஆசிய சிங்கங்களின் மக்கள்தொகை சீராக அதிகரித்து வருவதை கூட்டு முயற்சிகள் உறுதி செய்துள்ளன. ஆசிய சிங்கத்தின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதில் பழங்குடி சமூகங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பெண்களின் பங்கும் சமமாகப் பாராட்டுக்குரியது” எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
This morning, on #WorldWildlifeDay, I went on a Safari in Gir, which, as we all know, is home to the majestic Asiatic Lion. Coming to Gir also brings back many memories of the work we collectively did when I was serving as Gujarat CM. In the last many years, collective efforts… pic.twitter.com/S8XMmn2zN7
— Narendra Modi (@narendramodi) March 3, 2025