“போதைப்பொருளானது இருளையும்,அழிவையும் தருகின்றன”-பிரதமர் மோடி …!
போதைப் பொருளானது இருளையும்,அழிவையும் தருகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக ஜூன் 26 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, போதைப்பொருளை எதிர்த்துப் போராடும் மற்றும் உலகளாவிய போதைப்பொருள் பிரச்சினை குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளின் முயற்சிகளை இந்த நாள் குறிக்கிறது.
இந்நிலையில்,போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு,பிரதமர் நரேந்திர மோடி போதைப்பொருளை எதிர்த்துப் போராடிய அனைவரையும் பாராட்டியுள்ளார்.
மேலும்,இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:'”போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமான இன்று, நம் சமூகத்திலிருந்து போதைப்பொருளின் அச்சுறுத்தலை அகற்ற அடிமட்டத்தில் பணியாற்றும் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். இதுபோன்ற ஒவ்வொரு முயற்சியும் இன்றியமையாதது. எல்லாவற்றிற்கும் மேலாக,போதைப்பொருளானது அதனுடன் இருளையும், அழிவையும் தருகின்றன மற்றும் பேரழிவையும் ஏற்படுத்துகின்றன “என்று ட்வீட் செய்துள்ளார்.
Let us reiterate our commitment to #ShareFactsOnDrugs and realise our vision of a Drugs Free India. Remember- addiction is neither cool nor a style statement. Sharing an old #MannKiBaat episode which contained many aspects of overcoming the drugs menace. https://t.co/0XJpOApzbX
— Narendra Modi (@narendramodi) June 26, 2021