மத்திய பாஜக அரசின் எட்டாவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து,இமாச்சலப்பிரதேசத்தின் சிம்லாவில் இருந்து மத்திய திட்ட பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக உரையாற்றி வருகிறார்.இந்நிலையில்,விவசாயிகளின் உதவித் தொகை அடுத்த தவணையாக ரூ.21 ஆயிரம் கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் வருடாந்திர உதவித்தொகையாக ரூ.6000 வழங்கப்பட்டு வருகிது.இது 3 தவணைகளாக விவசாயிகளுக்கு பிரித்து வழங்கப்படுகிறது.இந்நிலையில்,விவசாயிகளுக்கு அடுத்த தவணை வழங்க ஏதுவாக ரூ.21 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி விடுவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து,இந்த தொகை பிரிக்கப்பட்டு நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.
மேலும்,இது குறித்து பிரதமர் கூறுகையில்:”கடந்த 8 ஆண்டுகளில்,ஒருமுறை கூட நான் என்னை பிரதமராக பார்க்கவில்லை.நான் ஆவணங்களில் கையொப்பமிட்டால் மட்டுமே எனக்கு பிரதமருக்கான பொறுப்பு உள்ளதாக உணர்கிறேன்.நான் என் வாழ்க்கை முழுவதும் 130 கோடி மக்களின் பிரதான் சேவக் ஆகவே இருப்பேன்’,என்று கூறியுள்ளார்.
மேலும்,”பிரதமரின் வீட்டுத் திட்டம்,உதவித்தொகை அல்லது ஓய்வூதியத் திட்டங்கள் எதுவாக இருந்தாலும்,தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஊழலைக் குறைத்துள்ளோம்.ஏழைகளின் அன்றாடப் போராட்டம் குறையும்போது, அவருக்கு அதிகாரம் கிடைத்தால்,அவர் தனது வறுமையை நீக்க புதிய ஆற்றலுடன் ஈடுபடுகிறார்.இந்த சிந்தனையுடன், எங்கள் அரசாங்கம் ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கத் தொடங்கியது.அந்த வகையில் தற்போது விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் வகையில் அடுத்த தவணையாக ரூ.21 ஆயிரம் கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.இதனால் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவர்”,என்று தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…