#BREAKING : 4 நாட்கள் பயணமாக அமரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி…!
4 நாட்கள் பயணமாக அமரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நீண்டகாலமாக வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்தார்.
இதனையடுத்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று பிரதமர் மோடி அவர்கள் டெல்லியில் இருந்து 4 நாட்கள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார். அங்கு நாளை முக்கிய தொழிலதிபர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது ஆப்பிள் தலைமை செயல் அதிகாரியும் சந்தித்து பேச உள்ளார்.
அதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் 24-ஆம் தேதி அதிபர் ஜோ பைடன் சந்தித்து, அவருடன் ஆப்கானிஸ்தான் விவகாரம், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ளார். பின், அமெரிக்கா, இந்தியா ,ஜப்பான் ,ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் கொண்ட QUAD கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.அதனை தொடர்ந்து, நியூயார்க் செல்லும் மோடி, 25ஆம் தேதி ஐநா சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.