மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!
தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தை டெல்லியில் இருந்து காணொலியில் பிரதமர் தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் மின்னணு மருத்துவ திட்டம் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில், இந்திய மருத்துவ துறையில் புதிய அத்தியாயம் எழுதப்பட உள்ளது. நவீன மின்னணு தொழில்நுட்பங்கள் வாயிலாக மருத்துவ சேவைகளை மக்கள் எளிதாக பெற வழிவகுப்பதே மின்னணு மருத்துவ திட்டம் என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தை டெல்லியில் இருந்து காணொலியில் பிரதமர் தொடங்கி வைத்தார். டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள எண் உருவாக்கப்பட்டு அட்டை தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.