டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பவினாவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இருந்து 54 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
அதன்படி,இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் பவினா பென்,உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் ஜோஃவ் யிங்கை எதிர்கொண்டார்.மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சீன வீராங்கனை இந்தியாவின் பவினா பென் படேலை 3:0 (11-7, 11-5, 11-6) என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
இதனால்,பவினா பென்னுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.தற்போது நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.மேலும்,பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்று பவினா சாதனைப் புரிந்துள்ளார்.
இந்த வெற்றி குறித்து பவினாவின் தந்தை ஹம்சுக்பாய் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “பவினா எங்களைப் பெருமைப்படுத்தியுள்ளார்.அவருக்குப் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப் போகிறோம். அவருடைய வெற்றியை நாங்கள் கொண்டாடப்போகிறோம்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்நிலையில்,வெள்ளிப்பதக்கம் வென்ற பவினாவை பிரதமர் மோடி காணொலியில் அழைத்து,அவரது முயற்சிகளைப் பாராட்டினார் மற்றும் பவினா வரலாற்றை எழுதியுள்ளார் என்றும்,அவருடைய எதிர்கால முயற்சிகள் சிறக்கவும் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும்,இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“பவினா படேல் வரலாற்றை எழுதியுள்ளார்.அவர் ஒரு வரலாற்று வெள்ளிப் பதக்கத்தை வீட்டிற்கு கொண்டு வருகிறார். அதற்காக அவருக்கு வாழ்த்துக்கள். அவரது வாழ்க்கை பயணம் ஊக்கமளிக்கிறது மற்றும் மேலும் இளைஞர்களை விளையாட்டுகளை நோக்கி ஈர்க்கும்”,என்று பதிவிட்டுள்ளார்.
அவரைத்தொடர்ந்து,குடியரசுத்தலைவர் ராஜ்நாத் சிங் பவினாவுக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:”பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக பவினா படேலுக்கு வாழ்த்துக்கள்.அவருடைய வெற்றி அவரின் ஆசீர்வதிக்கப்பட்ட திறமைகளையும் விடாமுயற்சியையும் நிரூபிக்கிறது. தேசம் அவரைப் பற்றி பெருமை கொள்கிறது”,என்று பதிவிட்டுள்ளார்.
மேலும்,பவினாவுக்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“வெள்ளி வென்ற பவினா படேலுக்கு வாழ்த்துக்கள். உங்கள் சாதனையை இந்தியா பாராட்டுகிறது. நீங்கள் தேசத்திற்கு பெருமை சேர்த்தீர்கள்”,என்று பாராட்டியுள்ளார்.
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…