ஊழல், குடும்ப அரசியலை எதிர்த்து போராட பாஜக உறுதிபூண்டுள்ளது.! பிரதமர் மோடி.பேச்சு.!

Default Image

பாஜக உருவான நாளை முன்னிட்டு பாஜக நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். 

பாஜக கட்சி உருவான நாளை (ஏப்ரல் 6) முன்னிட்டு டெல்லியில் பாஜக சார்பில் எம்பிக்கள் மத்தியில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அதில் பாஜக கட்சி பற்றி பல்வேறு விஷயங்களையும் அரசியல் கருத்துக்களையும் கூறினார்.

பாஜக உறுதி :

அவர் பேசுகையில் , பாரதீய ஜனதா கட்சி ஊழல் மற்றும் குடும்ப அரசியலை எதிர்த்துப் போராட உறுதிபூண்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சிக்கு தேசமே எல்லாவற்றிற்கும் மேலானது. ஊழல், வாரிசு அரசியல், சட்டம்-ஒழுங்கு சவால்களில் இருந்து இந்தியாவை ,மீட்டெடுப்பதில் பாஜக உறுதியாக உள்ளது என்று பிரதமர் மோடி.குறிப்பிட்டார்.

ஹனுமன் – பாஜக :

ஹனுமனுக்கும் பாஜகவுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை பிரதமர் மோடி குறிப்பிட்டார். அதில், பாஜக கட்சி தன்னலமற்ற சேவையை தனது கொள்கையாக கொண்டுள்ளது. ஹனுமனை போலவே தனது திறமையை அறிந்து இந்தியாவை பலப்படுத்த பாஜக செயல்பட்டு வருகிறது என குறிப்பிட்டார்.

அனைத்தும் செய்ய முடியும் :

மேலும், இன்று, ஹனுமான் ஜெயந்தி (ஏப்ரல் 6). ஹனுமனை போலவே, இந்தியாவும் தனது திறனை உணர்ந்து கொண்டிருக்கிறது. ஊழல், சட்டம் மற்றும் ஒழுங்கை எதிர்த்துப் போராடுவதற்கு, பா.ஜ.க., பகவான் ஹனுமனின் பலத்தை பெற்று வருகிறது. ஹனுமனின் முழு வாழ்க்கையையும் நாம் பார்த்தால், அவரால் “செய்ய முடியும்” என்ற மனப்பான்மை மேலோங்கி இருந்தது. அது அவருக்கு எல்லாவிதமான வெற்றிகளையும் கொண்டு வர உதவியது. என பாஜகவையும் பகவான் அனுமனையும் குறிப்பிட்டு மோடி பேசினார்.

எதிர்க்கட்சிகளின் இலக்கு :

எதிர்க்கட்சிகளால் பெரிதாக சிந்திக்க முடியாது. சிறிய இலக்குகளை கூட நிர்ணயம் செய்ய முடியாது. சிறிய சாதனைகளில் திருப்தி அடைந்து வருகின்றனர். என்று குற்றம் சாட்டினார். மேலும், ‘ பெரிய கனவு காண்பதிலும், இன்னும் பெரிய இலக்குகளை அடைவதிலும் பாஜக நம்பிக்கை கொண்டுள்ளது.’ என எதிர்கட்சிகளை விமர்சித்து பிரதமர் மோடி பேசினார்.

ஊழல் – வாரிசு அரசியல் :

சமூக நீதி முழக்கத்தை அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தும் எதிர்க்கட்சிகளை போல் இல்லாமல், சமூக நீதிக்காகவும், அனைத்து மக்களுக்க்கும், அவர்களின் வேலைவாய்ப்பிற்காகவும் பாஜக பாடுபடுகிறது. 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பாரபட்சமின்றி வழங்கப்பட்டு வருகிறது. காங்கிரஸின் அடையாளமாக இருப்பது, வாரிசு அரசியல், சொந்த பந்தம், ஊழல் மட்டுமே.  அதேசமயம் பாஜகவின் அரசியலானது, கலாசாரம் அனைத்தையும் உள்ளடக்கியது ஆகும் என குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்