“மம்தா பானர்ஜி இறந்த உடல்களை வைத்து அரசியல் செய்கிறார்”-பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!

Default Image

மம்தா பானர்ஜி தனது வாக்கு வங்கிக்காக இறந்த உடல்களை வைத்து கூச் பகுதியில் பேரணி நடத்துகிறார்,என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.இதில்,நான்காம் கட்ட வாக்குப் பதிவானது ஏப்ரல் 10 ம் தேதி நடைபெற்ற போது,கூச் பெஹார் மாவட்டத்தின் சீதகுல்ச்சியில் ஒரு வாக்குச் சாவடியில் வன்முறை வெடித்தது.இதனையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதைப் பற்றி கூறுகையில்,”மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎப்) இந்த துப்பாக்கிச் சூட்டை  நடத்தியுள்ளனர். வரிசையில் நின்ற வாக்காளர்களை சுட்டுக் கொள்ளும் அளவிற்கு சிஆர்பிஎஃப் வீர்களுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது ” எனக் கடுமையாக கேள்வி எழுப்பினார்.

இதனை தொடர்ந்து,மேற்கு வங்கத்தின் அசன்சோல் பகுதியில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி,”மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கடந்த வாரம் கூச் பெஹார் துப்பாக்கிச் சூட்டில் பலியான 5 பேரின் உடல்களை  வைத்து, தேர்தலில் தனக்கு சாதகமாக வாக்குகள் பெறுவதற்காக சதித்திட்டம் செய்கிறார்.கூச் பெஹாரில் என்ன நடந்தது என்பதை அறிய, சமீபத்தில் வெளியான ஆடியோ டேப்பைக் நீங்கள் கேட்டிருக்க வேண்டும்.ஏனென்றால்,இறந்தவர்களின் உடல்களை வைத்து பேரணி நடத்தி அரசியல் விளையாடுவது மம்தாவின் பழைய பழக்கமாகும்”,என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்