PM Modi visited Tirupati temple [Image source : Twitter / @narendramodi]
தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இம்மாதம் அறிவிக்கப்பட்டு இருந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சத்தீஸ்கர், மிசோராம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல நிறைவு பெற்றன. இதனை அடுத்து வரும் 30ஆம் தேதி தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 199 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வரும் டிசம்பர் 3ஆம் தேதி ஐந்து மாநில தேர்தல் வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தெலுங்கானாவில் தேர்தல் வாக்குப்பதிவுக்கு சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி என பிரதான கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தற்போது தெலுங்கானாவில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தெலுங்கானா தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்துள்ள பிரதமர் மோடி , அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். இது குறித்த புகைப்பங்களை பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். மேலும், 140 கோடி இந்தியர்கள் நல்ல ஆரோக்கியம், செழிப்பு மற்றும் வளர்ச்சிக்காக திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் பிரார்த்தனை செய்தேன். எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார் .
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடியை , ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வரவேற்றார். அதன் பிறகு திருப்பதி கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…