பாதுகாப்பு அச்சுறுத்தல்.! பிரிட்டன் பிரதமருடன் தொலைப்பேசியில் உரையாடிய பிரதமர் மோடி….
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் தொலைப்பேசியில் பேசிய பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இந்திய பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, இருதரப்பு விவகாரங்களில் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்திய தூதரக பாதுகாப்பு பிரச்சினை குறித்தும், இருதரப்பு உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
அதாவது, கடந்த மாதம் 19-ம் தேதி பிரிட்டனில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தின்போது, இந்திய தூதரகம் தாக்கப்பட்டதாகவும அங்கிருந்த இந்திய தேசியக் கொடி கீழே இறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது இது தூதரக பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியது.
இந்த சம்பவம் நடந்து சில வாரங்களுக்குப் பிறகு இந்த தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து அரசாங்கத்தின் இந்திய விரோத சக்திகளுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்கமாறு கோரிக்கை வைத்தார் பிரதமர் மோடி.
மேலும், இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்துள்ள பொருளாதார குற்றவாளிகள் நாடு கடத்துவது குறித்தும் பிரதமர் மோடி பேசியுள்ளார். இருதரப்பு விவகாரங்கள், முக்கியமாக வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு பிரதமர்களும் ஆய்வு செய்தனர். இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் முடிவடைய வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசியுள்ள்ளனர்.
Pleased to speak with UK PM @RishiSunak. Extended Baisakhi greetings to him, and new year greetings to the vibrant Indian community in the UK. We reviewed progress on a number of issues to further strengthen India-UK Comprehensive Strategic Partnership, including FTA.
— Narendra Modi (@narendramodi) April 13, 2023