கோரக்பூர்-லக்னோ, ஜோத்பூர்-அகமதாபாத் வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

FlagsOffVandeBharat

பிரதமர் நரேந்திர மோடி கோரக்பூர்-லக்னோ, ஜோத்பூர்-அகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், கோரக்பூர் ரயில் நிலைய மறுவடிவமைப்பு திட்டத்திற்கு ரூ.498 கோடியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதன்பின், கோரக்பூர்-லக்னோ மற்றும் ஜோத்பூர்-அகமதாபாத்(சபர்பதி) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோரக்பூரில் இருந்து புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் காலை 6:05 மணிக்கு புறப்பட்டு காலை 10:20 மணிக்கு லக்னோ நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் அயோத்தியை இரு நகரங்களுக்கும் இணைக்கும். இது பஸ்தி, அயோத்தி, லக்னோ ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும். இந்த ரயில் சனிக்கிழமையைத் தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும்.

ஜோத்பூரிலிருந்து காலை 5:55 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதியம் 12:05 மணிக்கு அகமதாபாத் (சபர்மதி) வந்தடையும். இந்த ரயில் பாலி, அபு ரோடு, பாலன்பூர் மற்றும் மெஹ்சானா நகரங்களை இணைக்கும். வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் இந்த ரயில் செவ்வாய் கிழமைகளில் இயக்கப்படாது.

மேலும், இந்தியாவில் இதுவரை 23 வழி தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவையால். நாட்டில் உள்ள வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்