ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடல்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் வரும் 31ம் தேதி முதல் தடகள போட்டிகள் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள 120க்கும் மேற்பட்ட இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வகையில், பிரதமர் மோடி வரும் 13ம் தேதி மாலை 5 மணிக்கு காணொளி மூலம் கலந்துரையாடி வாழ்த்து தெரிவிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க இந்திய அணியின் முதற்குழு வரும் 17ம் தேதி டோக்கியோ புறப்பட உள்ளதாக இந்திய ஒலிம்பிக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 90 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய முதற்குழு ஏர் இந்தியா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட உள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக் ஒளிருகிணைப்பாளர்கள் தலைப்பில் இருந்து இதுவரை எவ்வித ஒப்புதலும் வராதது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம் கடைசி நேர சிக்கல்களை தவிர்க்கும் விதமாக பயணத்தை திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்டுகிறது.