காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த 10 ஆம் தேதியில் இருந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்திருந்த நிலையில், எம்.பி. வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், வசந்தகுமார் எம்.பியின் மறைவு வருத்தம் அளிக்கிறது. எச்.வசந்தகுமாருடன் உரையாடியதில், தமிழகத்தின் வளர்ச்சியில் அவருக்கு இருந்த அக்கறையை நான் பலமுறை கண்டிருக்கிறேன். வணிகம் மற்றும் சமூக சேவையில் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. வசந்தகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : நடிகர் டெல்லி கணேஷின் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,சமூக வலைதளைத்தில் திரைத்துறை…
விருதுநகர் : குமாரசாமி ராஜா அலுவலகத்தில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து…
உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் ஒரு வருடம் பழமையான கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கிறது. இது மீதும் விசாரணைக்கு வந்ததற்கு…
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே…
சென்னை : வயது முதிர்வு காரணமாக பிரபல மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80) நேற்று இரவு காலமானார். சென்னையில்…
ரஷ்யா : ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது,மூன்று ஆண்டுகளாக…