இந்தியாவின் மிக நீளமான பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

pm modi mumbai

30,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) காலை மகாராஷ்டிரா மாநிலம் வருகை தந்தார். அதன் ஒருபகுதியாக, மகாராஷ்டிராவின் நாசிக்கில் ‘ஸ்வச்சதா அபியான்’ (தூய்மை இயக்கம்) நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நாசிக்கின் பஞ்சவடி பகுதியில் அமைந்துள்ள காலாராம் கோயிலின் தரையை மாப் போட்டு சுத்தம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து, இன்று பிற்பகல் 3:30 மணி அளவில், அடல் சேது என பெயரிடப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பை திருந்து வைத்தார். இதனையடுத்து, நவி மும்பையில் ‘உரான்-கார்கோபர் ரயில் பாதையின் 2-ம் கட்டம்’ உட்பட பல ரயில்வே திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார்.

இது சுமார் 21.8 கிமீ நீளமுள்ள 6-வழிப் பாலமாகும், இது கடலில் சுமார் 16.5 கிமீ நீளமும், நிலத்தில் சுமார் 5.5 கிமீ நீளமும் கொண்டது. 2016 டிசம்பரில் பாலத்தின் அடிக்கல்லும் பிரதமரால் நாட்ட இந்த மிகப்பெரிய பாலத்தை ரூ.17,840 செலவில் கட்டப்பட்டுள்ளது. உலகளவில் 12வது மிகப்பெரிய கடல் பாலம் இதுவாகும்.

இந்த பாலம் மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான இணைப்பை வழங்குவதாகவும், மும்பையில் இருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கு பயண நேரத்தை குறைக்கும் என்றும் கூறப்படுகிறது. அதாவது,  மும்பையில் இருந்து நவி மும்பைக்கான பயண நேரம் 2 மணிநேரத்தில் இருந்து 20 நிமிடங்களாக குறையும்.

புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகை கூடுதலாக ரூ.250 வழங்க உத்தரவு.!

மேலும், இந்த பாலத்தில் பயணிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 4 சக்கர வாகனங்களுக்கான வேக உச்சவரம்பு மணிக்கு 100 கி.மீ., இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வாகனங்கள் மும்பை போர்ட்-செவ்ரி வெளியேறும் பாதையை (வெளியேறு 1C) பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்