டியூப் லைட்கள் இப்படித்தான் வேலை செய்யும் என்று ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அப்பொழுது பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.அவர் பேசுகையில், காந்தி காந்தி என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, மகாத்மா காந்தி உங்களுக்கு டிரெய்லராக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு உயிர்மூச்சு என்று பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், எந்த மத நம்பிக்கை கொண்டவரையும் குடியுரிமை திருத்தச் சட்டம் பாதிக்காது.நாங்கள் மக்களை இந்தியர்களாக பார்க்கிறோம். ஆனால் எதிர்க்கட்சிகள் மக்களை அவரவர்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் அணுகுகின்றனர் என்று கூறினார். பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறுக்கிட்டார். அப்பொழுது பிரதமர் மோடி பேசுகையில் , நான் 30 நிமிடங்களாக பேசி வருகிறேன். இப்போது தான் அங்கு மின்சாரம் பாய்ந்துள்ளது. டியூப் லைட்கள் இப்படித்தான் வேலை செய்யும் என்று ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…