விமான விபத்து பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் பிரதமர் மோடி

Default Image

துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில்  நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்தது இந்த விமானத்தில் 2 விமானிகள், 5 விமான பணிப்பெண்கள், 10 குழந்தைகள் மற்றும் 174 பயணிகள் பயணம் செய்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்குமாறு முதலமைச்சர் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ஏ.சி. மொய்தீனுக்கு உத்தரவிட்டுள்ளார் .மேலும் அவசர நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் .

இதற்கிடைய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி  தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யுமாம் என்று தெரிவித்துள்ளார். கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி) அசோக் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகள் குழு விமான நிலையத்தில்  மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக பினராயி விஜயன் பிரதமர்  மோடிக்குத் தெரிவித்துள்ளார் .

இந்த விபத்தில் முதற்கட்டமாக 45 பேர் கோழிக்கோடு சுற்றியுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு  செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த விமானத்தை இயக்கிய  2 விமானிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சில பயணிகள் கவலைக்கிடமாக உள்ளதாக  தகவல் தெரிவிக்கிறது .இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது .மேலும் தேசிய மீட்டப்புப்படை வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்