7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா குறித்து 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்தந்த மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.குறிப்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம், தமிழகம், டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில் பாதிப்பு அதிகளவு உள்ள மாநிலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.இந்த கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர். அப்போது அந்தந்த மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆய்வு செய்வார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.