நாடாளுமன்ற திறப்பு விழாவை முடிசூட்டும் நிகழ்ச்சியாக நினைக்கிறார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி

Rahul Gandhi - MODI

புதுடெல்லியில் சுமார் 64,500 சதுர அடியில், ரூபாய் 970 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த திறப்பு விழா இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வருகிறது, தற்போது பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்துவைத்துள்ள பிரதமர் மோடி, இது தனக்கான முடிசூட்டும் நிகழ்ச்சியாக நினைத்துக்கொள்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

இதற்கிடையில், புதிய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சாவர்க்கர் படத்திற்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், நாடாளுமன்ற அவைக்குள் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகிய இருவரும் ஒன்றாக நுழைந்தனர்.

நாடாளுமன்றத்திற்கு வந்த பிரதமரை கரவொலி எழுப்பி MPக்கள், மாநில முதல்வர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அடுத்ததாக, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் தபால் தலை மற்றும் ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்