பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்திய வீரருக்கு பிரதமர் மோடி வாழ்த்து…!
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்திய வீரர் பிரவீன் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த பிரவீன் குமார் விளையாடி உள்ளார். பிரிட்டன் வீரர் ஜனதன் உடன் பிரவீன்குமாருக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இறுதியில் நூலிழையில் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த பிரவீன்குமார் 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை பதிவு செய்தார்.
18 வயதே ஆன பிரவீன்குமார் பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது பெருமை அளிப்பதாகவும், இந்த பதக்கம் அவரது கடின உழைப்பு மற்றும் ஈடு இணையற்ற அர்ப்பணிப்புக்கு கிடைத்தது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு எனது வாழ்த்துக்கள், அவரது எதிர்கால முயற்சிக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
Proud of Praveen Kumar for winning the Silver medal at the #Paralympics. This medal is the result of his hard work and unparalleled dedication. Congratulations to him. Best wishes for his future endeavours. #Praise4Para
— Narendra Modi (@narendramodi) September 3, 2021