துப்பாக்கி சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…!
பாராலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற மணீஷ் நார்வல் மற்றும் சிங்ராஜ்-க்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டோக்கியோ பாராலிம்பிக்கில் 50 மீட்டர் துப்பாக்கிசூடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வாலுக்கு தங்க பதக்கமும், சிங்ராஜுக்கு வெள்ளி பதக்கமும் கிடைத்துள்ளது.
இந்த துப்பாக்கிசூடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ள மணீஷ் நர்வால் 218.2 புள்ளிகளுடன் பாராலிம்பிக்கில் படைத்துள்ளார். மேலும், ஏற்கனவே 10 மீட்டர் துப்பாக்கிசூடுதல் போட்டியில் சிங்ராஜ் வெண்கலம் வென்ற நிலையில், தற்போது வெள்ளி பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், துப்பாக்கி சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற மணீஷ் நார்வல்மற்றும் சிங்ராஜ்-க்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.