டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் ஜூலை 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை 32 வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கவுள்ள 16 பேர் கொண்ட இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங்கும், துணை கேப்டன்களாக பின்கள வீரர்கள் பிரேந்திர லக்ரா, ஹர்மன்பிரீத் சிங் ஆகியோரும் நியமிக்கப்பட்டு இருப்பதாக இந்திய ஹாக்கி அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி அவர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பல ஆண்டுகளாக இந்தியாவினை ஒலிம்பிக் மூலம் பெருமைப்படுத்திய அனைவரையும் தான் பாராட்டுவதாகவும், மற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கான அவர்களின் பங்களிப்புகள் மற்றும் முயற்சிகள் குறித்து நம் நாடு பெருமிதம் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சில வாரங்களில் டோக்கியோ 2021 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடங்குகிறது, எனவே நமது குழுவினருக்கு வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
In a few weeks, @Tokyo2020 begins. Wishing the very best to our contingent, which consists of our finest athletes. In the run up to the games, here is an interesting quiz on MyGov. I urge you all, specially my young friends to take part. https://t.co/De25nciIUZ
— Narendra Modi (@narendramodi) June 23, 2021